×

உளுந்து சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

அருப்புக்கோட்டை, செப்.7: அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உளுந்து தொகுப்பு முன்னிலை செயல் விளக்க திடல் திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ் தலைமை வகித்து உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான உழவியல் தொழில் நுட்பங்கள், களைகளை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள், தரமான விதைகளின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார்.

தொடர்ந்து இணைபேராசிரியர் முனைவர் ஷீபா, உளுந்து வம்பன் 11 சிறப்பியல்புகளை கூறினார். உதவிபேராசிரியர் வேணுதேவன், உளுந்து சாகுபடியில் பின்பற்ற வேண்டிய விதை நேர்த்தி முறைகளை பற்றி விளக்கமளித்தார். இணை பேராசிரியர் உஷாராணி உளுந்து சாகுபடியில் பின்பற்ற வேண்டிய பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி தெளிவாக எடுத்து கூறினார். இப்பயிற்சியில் கலந்துகொண்ட விவசாய பொதுமக்களுக்கு உளுந்து தொகுப்பு முன்னிலை செயல் விளக்க திடல் அமைக்க ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய தேவையான இடுபொருட்கள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post உளுந்து சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Aruppukkottai ,Uludu ,Aruppukottai Agricultural Science ,Center ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் உளுந்து, பயறு சாகுபடி பரப்பளவு குறைந்தது