×

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் எம்எல்ஏ வழங்கினார்

தேவாரம், செப். 7: பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, மகளிர் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உள்ளாட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும், நீர்நிலை மேம்பாட்டுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் முன்னுரிமை அளித்து வருகிறார்.

இதன்படி, தேனி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி வழங்கினார்.நிகழ்ச்சியில் உத்தமபாளையம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குமரன், பேரூர் தி.மு.க. கழகச் செயலாளர் இளங்கோ, பேரூராட்சி தலைவர் லட்சுமி இளங்கோ, துணைசேர்மன் சுருளிவேலு, தலைமை ஆசிரியர் சரவணக்குமார் மற்றும் கவுன்சிலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Devaram ,Government of Tamil Nadu ,Pranpipuram Government Higher School ,Djagar ,
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பினை...