×

கிருஷ்ணர் சிலைகள் விற்பனை மும்முரம் கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும்

திருப்பூர், செப்.7: தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆத்திச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் மகிஷா ரமேஷ்குமார், மாவட்ட பொருளாளர் ரவிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சங்கத்தின் மாநிலத்தலைவர் முத்துக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சோதனை கொள்முதல் என்ற பெயரில் வியாபாரிகளிடம் அபராதம் விதிப்பதை வணிகவரித்துறை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். ஒருங்கிணைந்த கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும். கஞ்சா, மது உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும்.
புகையிலை பொருட்கள் விற்பனையில் பழைய வழக்குகளை காட்டி வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளை முடக்குவதை நிறுத்த வேண்டும். சுதேசி வியாபாரத்தை ஊக்குவிக்க வேண்டும். கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி ரயில் இயக்கப்பட வேண்டும். வியாபார ரீதியாக பணப்புழக்கம் உள்ள திருப்பூரில் அடிக்கடி வழிப்பறி நடப்பதால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் சரவணன், கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கம் சார்பில் மாவட்ட துணைத்தலைவர் மாரிராஜன், ஒருங்கிணைப்பாளர் கணேஷ் செல்வக்குமார், இணை செயலாளர் ஆமோஸ், இளைஞரணி தலைவர் வெங்காயம் மணி, இளைஞரணி செயலாளர் கண்ணன், மகளிரணி தலைவி ஆனந்தி, துணைத்தலைவி செல்லாத்தாள், இணை செயலாளர் கவிதா மற்றும் நிர்வாகிகள் வரதராஜன், கிருஷ்ணகுமார், சிவா, ராஜாராமன், கோபி, காமராஜர் மக்கள் மன்றத்தின் மாவட்ட தலைவர் அன்னை மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ணர் சிலைகள் விற்பனை மும்முரம் கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tuticorin ,Krishna ,Tirupur ,Tirupur District ,Administrators ,Tamil Nadu Traders Association ,Tirupur Union Mill Road ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...