×

அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

சாயல்குடி, செப்.7: மங்களம் பாலதேவதை அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. கடலாடி அருகே மங்களம் கிராமத்தில் உள்ள விநாயகர், பாலதேவதை வில்வஜோதி அம்மன், கிருஷ்ணாம்பிகை, கருப்பணசாமி மற்றும் பரிவார, கிராம தேவதைகளுக்கு இரண்டாம் ஆண்டு வருடாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தது. வேத மந்திரங்களுடன் சாமி விக்கிரகங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது.

பிறகு சாமி விக்கிரகத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. நிகழ்ச்சியில் பாலதேவதை அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம், எம்.கரிசல்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் காளிமுத்து, கோயில் செயலாளர் ராமமாரி மற்றும் சுற்று வட்டார கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

The post அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Amman Temple ,Sayalgudi ,Annual Abhishekam ,Mangalam Paladevati Amman Temple ,Vinayagar ,Baladevati ,Mangalam ,Kudaladi ,Amman Koil ,
× RELATED குளித்தலை அருகே வீரவள்ளி பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்