×

கொடுமுடியில் நிலக்கடலைக்காய் ரூ.5.56 லட்சத்துக்கு ஏலம்

கொடுமுடி, செப். 7: கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 5 லட்சத்து 56 ஆயிரத்து 737 ரூபாய்க்கு நிலக்கடலைக்காய் ஏலம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் 278 நிலக்கடலைக்காய் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இது 1 கிலோ குறைந்தபட்ச விலையாக 65 ரூபாய் 45 காசுக்கும்,அதிகபட்ச விலையாக 83 ரூபாய் 30 காசுக்கும், சராசரி விலையாக 80 ரூபாய் 50 காசுக்கும் ஏலம் போனது. இதில், மொத்தம் 79.72 குவிண்டால் எடையுள்ள நிலக்கடலைக்காய் 5 லட்சத்து 56 ஆயிரத்து 737 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கொடுமுடியில் நிலக்கடலைக்காய் ரூ.5.56 லட்சத்துக்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Groundnut ,Kodumudi ,Dinakaran ,
× RELATED மாணவ ஊரக வேளாண் பணி