×

ஈரோடு, கோபி அரசினர் ஐஐடிகளில் 23ம் தேதி வரை சேர்க்கை நீட்டிப்பு

ஈரோடு, ஆக. 7: ஈரோடு, கோபி அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ.) 2023ம் ஆண்டுக்கான சேர்க்கையை 100 சதவீதம் நிரப்பிடும் பொருட்டு கால அவகாசம் வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, கோபி ஐடிஐகளில் 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள் எலக்ட்ரீஷியன், பிட்டர், மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள், ரெப்ரிஜெரேசன் மற்றும் ஏர்கன்டிசனிங் டெக்னீஷியன், டர்னர், மெஷினிஸ்ட், சிவில் ட்ராப்ட்ஸ்மேன் மற்றும் டெக்ஸ்டைல் வெட் ப்ராஸஸிங் டெக்னீஷியன் ஆகிய தொழிற்பிரிவுகளிலும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வெல்டர் மற்றும் ஒயர்மேன் தொழிற்பிரிவிலும், டாடா டெக்னாலஜி பல நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப மையங்களாக உயர்த்தப்பட்டு அதன் கீழ் புதிய தொழிற்பிரிவுகளான அட்வான்ஸ்டு சிஎன்சி மிஸினிங் டெக்னீஷியன் – 2 வருடம், மேனுபேக்ச்சரிங் கண்ட்ரோல் அண்டு ஆட்டோமேசன் -1 வருடம், இன்டஸ்ரியல் ரோபோடிக்ஸ் அண்டு டிஜிட்டல் மேனுபேக்ச்சரிங் டெக்னீஷியன் – 1 வருடம், பேசிக் டிசைனர் மற்றும் விர்ச்சுவல் வெரிபையர் – 2 வருடம், போன்ற தொழிற்பிரிவிலும் அரசு இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வின் மூலமாக சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம்.
மேலும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாதவர்கள் கோபிசெட்டிபாளையம் மற்றும் ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகலாம். பயிற்சியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா சிறந்த பயிற்சியுடன் இலவச தங்கும் விடுதி, தமிழக அரசால் மாதம் ரூ.750 உதவித்தொகை, புதுமைப்பெண் திட்டத்தில் தகுதியான மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை, விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, வரைபடக் கருவிகள், தையற்கூலியுடன் 2 செட் சீருடை, காலணி மற்றும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை ஆகிய சலுகைகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஈரோடு, கோபி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை நேரிலோ அல்லது 0424-2275244, 94990 55705, 04258-233234 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஈரோடு, கோபி அரசினர் ஐஐடிகளில் 23ம் தேதி வரை சேர்க்கை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Gobi government ,Gobi Government Vocational Training Institutes ,ITIs ,Erode, Gobi Government ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...