×

நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

நாகப்பட்டினம், செப்.7: நாகப்பட்டினம் எஸ்.பி., அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் எஸ்.பி., ஹர்ஷ்சிங் தலைமையில் நடந்தது. முகாமில், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 11 மனுக்களை அளித்தனர். மனுவை பெற்ற எஸ்.பி., விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஒவ்வொரு திங்கள்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது போல் ஒவ்வொரு புதன்கிழமைதோறும் எஸ்.பி., அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன்பெறலாம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு, கள்ளசாராயம் மற்றும் கஞ்சா ஆகியவை விற்பனை குறித்து தயக்கம், அச்சமின்றி மனுவாக தெரிவித்து பயன்பெறலாம். புகார் அளிப்பவர்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். பொதுமக்கள் மனுவாக அளிக்க தயங்கினால் எஸ்.பி.,யுடன் பேசுங்கள் என்ற செல்போன் எண் 8428103040 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவித்தாலும் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று எஸ்.பி., ஹர்ஷ்சிங் தெரிவித்தார்.

The post நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : People's Grievance Camp ,Nagapattinam SP ,Nagai District ,Nagapattinam ,SP ,Harsh Singh ,Nagapattinam SB Office ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூரில் மழை ஓய்வெடுத்து வெயில்...