×

லோக்பால் தலைவர், உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு

புதுடெல்லி: உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட லோக்பால் அமைப்பின் தலைவராக இருந்த நீதிபதி பினாகி சந்திர கோஷ் கடந்த வருடம் ஓய்வு பெற்றார்.அதன் பிறகு நீதிபதி பிரதீப் குமார் மொகந்தி தற்காலிக தலைவராக செயல்பட்டு வருகிறார். தற்போது 5 உறுப்பினர்கள் உள்ளனர். 3 உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இந்த அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை பரிந்துரை செய்வதற்கு நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் உயர்மட்ட கமிட்டியை ஒன்றிய அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில் லோக்பால் அமைப்புக்கான தலைவர், உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக நாளிதழ்களில் அரசு விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில், இந்த பதவிக்கான தகுதிவாய்ந்த நபர்கள் செப். 28ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பிரதமர் தலைமையிலான குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஜனாதிபதி நியமிப்பார்.

The post லோக்பால் தலைவர், உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Lokball ,New Delhi ,Justice ,Pinaki ,Lokeball ,Dinakaran ,
× RELATED நாட்டுக்கு எதிரான குற்ற செயல்களில்...