×

பிரதமரின் பாதுகாப்பு படை தலைவர் அருண் குமார் மறைவு

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு பிரிவின் இயக்குனராக இருந்த அருண் குமார் உடல்நலக்குறைவால் நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார். கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அருண் குமார் சின்ஹா கடந்த 2016ம் ஆண்டு மார்ச்சில் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அருண் குமார் சின்ஹா கடந்த சில நாட்களுக்கு முன் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அருண் குமார் சின்ஹா உயிரிழந்தார். அவருக்கு வயது 61.

The post பிரதமரின் பாதுகாப்பு படை தலைவர் அருண் குமார் மறைவு appeared first on Dinakaran.

Tags : Security Force ,Arun Kumar ,New Delhi ,Special Security Division ,Modi ,Prime Minister's ,Dinakaran ,
× RELATED எல்லை பாதுகாப்பு படைக்கு ராணுவத்தை போன்று சலுகைகள் வழங்க வேண்டும்