×

நேதாஜியின் பேரன் பாஜவுக்கு முழுக்கு

கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பேரனான சந்திர போஸ் கடந்த 2016ம் ஆண்டு பாஜவில் இணைந்தார். அப்போது அவருக்கு மேற்கு வங்க மாநில பாஜ துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. மேற்கு வங்க சட்டபேரவை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலிலும் போட்டியிட்ட அவர் இரு தேர்தலிலும் தோல்வியுற்றார். 2020ல் கட்சி அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்ட போது சந்திரபோசின் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் நேற்று கட்சியில் இருந்து விலகினார்.

கட்சி தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,நேதாஜியின் சித்தாந்தத்தை நாடு முழுவதும் பரப்புவது பற்றி கட்சி தலைமையிடம் பேசி அனுமதி பெற்றேன். இந்திய மக்களை ஒன்றிணைப்பது என்ற நேதாஜியின் சித்தாந்தத்தை பரப்ப ஆசாத் ஹிந்த் மோர்ச்சா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. மதம், ஜாதி, இனங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கத்தின் மூலம் நாட்டு மக்களை இணைப்பதே இதன் நோக்கம். ஆனால், இந்த முயற்சிக்கு மாநிலத்திலும், ஒன்றியத்திலும் பாஜவினரிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை.இதனால் கட்சியில் இருந்து விலகுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

The post நேதாஜியின் பேரன் பாஜவுக்கு முழுக்கு appeared first on Dinakaran.

Tags : Netaji ,Bajaku ,Kolkata ,Subhash Chandra Bose ,Chandra Bose ,BJP ,Bajuku ,
× RELATED கொல்கத்தாவில் 21 மணி நேரம் விமான சேவை ரத்து