×

போலி பணி ஆணைகளை நம்பி ஏமாற வேண்டாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, செப்.7: சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக போலியான பணி நியமன ஆணைகள் வழங்கப்படுவதாக மேயர் பிரியா கவனத்திற்கு வந்துள்ளது. இந்த போலி பணி நியமன ஆணைகள் தொடர்பாக உரிய குற்ற நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை பணி நியமனங்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படும். எனவே, இதுபோன்ற போலியான பணி நியமனங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. போலி பணி நியமன ஆணை குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போலி பணி ஆணைகளை நம்பி ஏமாற வேண்டாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Chennai ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்