×

திருத்தணியில் ₹3 கோடியில் புதிய காய்கறி மார்க்கெட் இடமாற்றம் குறித்து 2வது கட்ட ஆலோசனை:  புதிய கட்டிடம் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு  3 மாதத்தில் முடிக்கப்படும் என வாக்குறுதி

திருத்தணி, செப். 7: திருத்தணி நகராட்சியில் காமராஜர் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுடன் இடம் மாற்றம் குறித்து இரண்டாம் அலோசனை கூட்டம் நடைபெற்றது. திருத்தணி மாபோசி சாலையில் காமராஜர் காய்கறி மார்க்கெட், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. திருத்தணி மற்றும் அதனை சுற்றுப்புற கிராமத்து பகுதியில் இருந்து பொதுமக்கள் இந்த வளாகத்திற்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில், இந்த மார்க்கெட் வளாகம் ஆங்காங்கே சிதலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, இந்த மார்க்கெட்டை அப்புறப்படுவிட்டு புதிதாக கட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் தற்போது, இதை இடித்துவிட்டு புதியதாக கட்டப்பட உள்ள மார்க்கெட் வளாகத்தில் மொத்தம் 86 கடைகள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தம் இடம், காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்கள் நிறுத்துமிடம், நவீன கழிப்பிடம், மார்க்கெட்டில் பணிபுரியும் பணியாளர்கள் ஓய்வறை ஆகியவை ₹3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கு வைத்துள்ள கடை குத்தகைதாரர்களின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் திருத்தணி மாபொசி சாலையில் உள்ள வன்னியர் சத்திரத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் திருத்தணி சரஸ்வதி பூபதி தலைமை தாங்கினார், நகர மன்ற ஆணையர் அருள் அனைவரையும் வரவேற்று பேசினார். நகர மன்ற துணைத் தலைவர் சாமிராஜ், நகர்மன்ற பொறியாளர் விஜயராஜ காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி பேசும்போது, திருத்தணி நகரம் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. தற்போது, இந்த பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட் வளாகம் இட நெருக்கடி அடைந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் காந்தி ஆகியோர் வழிகாட்டுதலின்படி ₹3 கோடி நிதி ஒதுக்கி உள்ளார். எனவே, இங்கு 3 மாத காலத்திற்குள் பழைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்காக கட்டிடம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளும்போது, வியாபாரிகள் திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள உழவர் சந்தையில், தற்காலிக காய்கறி கடைகள் அமைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பேசினார்.

அப்போது வியாபாரிகள் தரப்பில் பேசியதாவது, கடந்த மே மாதம் நடைபெற்ற கூட்டத்தில், அரக்கோணம் சாலையில் உள்ள உழவர் சந்தை நீண்ட தொலைவு என கூறினோம். தற்போது, நடைபெறும் கூட்டத்தில் இந்த கட்டிடமே எங்களுக்கு போதுமானது, எங்களுக்கு புதிய கட்டிடம் வேண்டாம் என பேசினர். இதற்கு பதில் அளித்த நகர் மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, நகராட்சி ஆணையர் அருள் மற்றும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி ஆகியோர் கூறுகையில், 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடம் பழுதடைந்து போதிய வசதியின்றி இட நெருக்கடியால் உள்ளது. எனவே, எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும். வியாபாரிகள், கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளாக கடை மூடினீர்கள். அதேபோன்று, குறைந்தது 4 மாத காலம் மட்டுமே நீங்கள் இடம் மாறி வியாபாரம் செய்யப் போகிறீர்கள் அதற்குள், அரசு அசுர வேகத்தில் இங்கே நவீன வசதிகளுடன் கூடிய காய்கறி மார்க்கெட் வளாகத்தை கட்டி முடித்து தங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்.

மேலும், இந்த மார்க்கெட்டில் யார் தற்போது வியாபாரம் செய்து வருகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இந்த வளாகத்தில் இடம் உண்டு. அதனால், தாங்கள் எந்தவித அச்சப்பட தேவையில்லை என கூறினர். இருப்பினும் இந்த கூட்டத்தில் ஒரு சில வியாபாரிகள் இப்போது இருப்பதே எங்களுக்கு போதுமானது என எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில், அதில் பங்கேற்ற பல வியாபாரிகள் இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மேலாளர் நாகரத்தினம், நகராட்சி பொதுப்பணி மேற்பார்வையாளர் நாகராஜ், நகராட்சி வருவாய் ஆய்வாளர் ராஜேஷ், நகராட்சி உதவியாளர்கள் முரளி, ஜெகநாதன், காமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 4 மாத காலம் மட்டுமே நீங்கள் இடம் மாறி வியாபாரம் செய்யப் போகிறீர்கள் அதற்குள், அரசு அசுர வேகத்தில் இங்கே நவீன வசதிகளுடன் கூடிய காய்கறி மார்க்கெட் வளாகத்தை கட்டி முடித்து தங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும். மேலும், இந்த மார்க்கெட்டில் யார் தற்போது வியாபாரம் செய்து வருகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இந்த வளாகத்தில் இடம் உண்டு.

The post திருத்தணியில் ₹3 கோடியில் புதிய காய்கறி மார்க்கெட் இடமாற்றம் குறித்து 2வது கட்ட ஆலோசனை:  புதிய கட்டிடம் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு  3 மாதத்தில் முடிக்கப்படும் என வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Thiruthani ,Kamarajar ,Dinakaran ,
× RELATED சென்டர் மீடியனில் பைக் மோதி விபத்து கல்லூரி மாணவர் பரிதாப பலி