×

திருத்தணி முருகன் கோயிலில் 200 கலைஞர்கள் நிகழ்த்திய 10 மணி நேர பரதநாட்டியம்: பக்தர்கள் கண்டுகளிப்பு

திருத்தணி, செப். 7: திருத்தணி முருகன் கோயிலில் 200 கலைஞர்கள் பங்கேற்று தொடர்ந்து 10 மணி நேரம் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டுகளித்தனர். திருத்தணியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இங்குள்ள திருத்தல பாகம் திருத்தளத்தில் மாதந்தோறும் கிருத்திகை விழா நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் ஆவணி கிருத்திகையை முன்னிட்டு நிர்தியக்ஷேரா கலைப்பள்ளி சார்பில், நாட்டிய கலா ரத்னா திவ்ய தர்ஷினி குழுவினரின் நாட்டிய சமர்ப்பனம் நிகழ்ச்சி நடந்தது. இதில், பல்வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்டு, கோயிலில் உள்ள மண்டபத்தில் முருகருக்கு நாட்டிய சமர்ப்பனம் செய்தனர். நிகழ்ச்சியின்போது, விழாவில் பங்கேற்ற பரத கலைஞர்களுக்கு நிர்திய மயூரி என்ற பட்டமும், குருமார்களுக்கு நவரச நாட்டிய அர்ப்பனா என்ற பட்டமும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினராக, திருத்தணி முருகன் கோயில் அறங்காவலர் உஷா ரவி கலந்துகொண்டார். காலை முதல் இரவு வரை தொடர்ந்து 10 மணி நேரம் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டுகளித்தனர்.

The post திருத்தணி முருகன் கோயிலில் 200 கலைஞர்கள் நிகழ்த்திய 10 மணி நேர பரதநாட்டியம்: பக்தர்கள் கண்டுகளிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruthani Murugan Temple ,Thiruthani ,Tiruthani Murugan Temple ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்