×

வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் சட்டமன்ற உறுதிமொழிக்குழு இன்று நெல்லை வருகை

நெல்லை, செப். 7: நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழிக் குழுவினர் தலைவர் வேல்முருகன் தலைமையில், உறுப்பினர்கள் நெல்லை மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் ேமற்கொள்கின்றனர். இந்தக் குழுவினர் இன்று (7ம் தேதி) காலை நெல்லை மாவட்டத்தில் நிலுவையிலுள்ள உறுதிமொழிகளுள் நிறைவேற்றப்பட்டவை, நடந்து முடிந்த பணிகள் குறித்து நேரில் சென்று, கள ஆய்வு மேற்கொள்கின்றனர். இதனைத்தொடர்ந்து, பிற்பகல் 2 மணி அளவில், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவர் வேல்முருகன் தலைமையில், நெல்லை கலெக்டர் கார்த்திகேயன், சட்டமன்ற பேரவை உறுதிமொழிக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நெல்லை மாவட்டத்தில் தொடர்புடைய உறுதிமொழிகள் குறித்து அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.

The post வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் சட்டமன்ற உறுதிமொழிக்குழு இன்று நெல்லை வருகை appeared first on Dinakaran.

Tags : Assembly pledge committee ,Velmurugan MLA ,Nella ,Nellie ,Tamil Nadu Legislative Assembly Pledge Committee ,Nellai district ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED நெல்லை மறை மாவட்ட ஆசிரியர்களை நிரந்தர...