- கிருஷ்ண ஜெயந்தி
- தர்மபுரி
- தர்மபுரி கோட்டை பெருமாள் கோவில்
- தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி பெருமாள் கோவில்
- கிருஷ்ண ஜெயந்தி திருவிழா
- Kolagalam
தர்மபுரி, செப்.7: தர்மபுரி கோட்டை பெருமாள் கோயிலில், கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி பெருமாள் கோயிலில், நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கோட்டை முனியப்பன் கோயிலில் இருந்து, காலை ஏரளாமான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலை அடைந்தனர். அங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதையடுத்து பெருமாள் வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த விசேஷ பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணியளவில் உரி அடித்தல் நிகழ்ச்சியும், பிரகார உற்சவமும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
The post கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம் appeared first on Dinakaran.
