தர்மபுரி, செப்.7: தர்மபுரி மாவட்ட மக்களை தேடி மருத்துவ ஊழியர்களின் சிறப்பு பேரவை கூட்டம் சிஐடியூ அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் அங்கம்மாள் தலைமை வகித்தார். மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில துணைத்தலைவர் பாலாம்பிகா ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் சசிகலா, சிஐடியூ மாவட்ட செயலாளர் ஜீவா, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் லெனின் மகேந்திரன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக கோகிலா, துணைத்தலைவர்களாக திலகவதி, பிரியா கலைவாணி, அகிலா, செயலாளராக விஜியலஷ்மி, இணை செயலாளர்களாக திவ்யா, வென்மதி, சிவகாமி, கெளசல்யா, பொருளாளராக சசிகலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், மக்களை தேடி மருத்துவ தன்னார்வலர்களை, தொழிலாளியாக அங்கீகரித்து, பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பணி நேரத்தை வரைமுறை செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ₹26 ஆயிரம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் பேரவை கூட்டம் appeared first on Dinakaran.
