×

கைத்துப்பாக்கி வைத்திருந்த ஓபிஎஸ் அணி செயலர் கைது

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மேலப்பசலை ஊராட்சிக்குட்பட்ட தீயனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலா (எ) பாலமுருகன்(45). ஓபிஎஸ் அணியில் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருக்கிறார். நேற்று மானாமதுரை உட்கோட்ட காவல்நிலைய ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது ஓபிஎஸ் அணி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் வீட்டில் அனுமதியின்றி கைத்துப்பாக்கியும் தோட்டாக்களும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனையடுத்து மானாமதுரை போலீசார், பாலமுருகன் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது கைத்துப்பாக்கி, 32 ேதாட்டாக்களை கைப்பற்றிய போலீசார், பாலமுருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர், கைத்துப்பாக்கியை ஜம்மு – காஷ்மீரில் இருந்து வாங்கி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

The post கைத்துப்பாக்கி வைத்திருந்த ஓபிஎஸ் அணி செயலர் கைது appeared first on Dinakaran.

Tags : OPS team ,Manamadurai ,Bala (A) Balamurugan ,Thiyanur village ,Melappasalai panchayat ,Sivagangai district ,OPS ,Dinakaran ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!