
- உலகக்கோப்பை காற்பந்து தொடர்
- அப்போட்
- மெல்போர்ன்
- ஆஸ்திரேலியா
- ஐசிசி உலகக் கோப்பை ஒருநாள் போட்டி
- பாட் கம்மின்ஸ்…
- உலகக் கோப்பை தொடர் ஆஸி
- தின மலர்
மெல்போர்ன்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையில் மொத்தம் 15 வீரர்கள அடங்கிய அணியை ஆஸி. தேர்வுக் குழுவினர் தேர்வு செய்துள்ளனர். வேகப் பந்துவீச்சாளர் ஷான் அபாட்டுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கணுக்கால் காயத்தால் அவதிப்படும் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லும் அணியில் இடம் பிடித்துள்ளார். அணியில் மாற்றம் செவதற்கு செப். 28 வரை அவகாசம் இருப்பதால், கடைசி நேர மாறுதல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு வீரர்களை சேர்க்க வேண்டும் என்றால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒப்புதல் அவசியம்.
ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஷான் அபாட், ஆஷ்டன் ஏகார், அலெக்ஸ் கேரி, கேமரான் கிரீன், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஸம்பா.
The post உலக கோப்பை தொடர் ஆஸி. அணியில் அபாட் appeared first on Dinakaran.