×

வாக்குப்பதிவு இயந்திரம் வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: இந்திய தேர்தல்களை கண்காணிக்கும் அமைப்பான ஏ.டி.ஆர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் பதிவான வாக்குகளை சரிபார்க்கும் வி.வி.பேட் இயந்திரத்தின் இரண்டின் கணக்கீடுகளையும் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் வாக்களிக்க கூடிய குடிமக்களுக்கு தாங்கள் சரியான வாக்குகளை தான் செலுத்தி இருக்கிறோமா என்பதை தெரிந்துகொள்ள வழி வகுக்க வேண்டும். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

இதையடுத்து மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை இதுபோன்ற ஏதாவது ஒரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. எனவே இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் தேர்தல் நடந்தாலும் கூட அது தற்போது பின்பற்றப்படும் முறையிலேயே நடக்கட்டும். மேலும் இந்த மனுவை எப்போது விசாரிக்கலாம் என்று நவம்பர் மாதம் முடிவெடுத்துக் கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post வாக்குப்பதிவு இயந்திரம் வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Supreme Court Action ,New Delhi ,India ,Elections Monitoring Organisation ,Supreme Court ,
× RELATED நாட்டுக்கு எதிரான குற்ற செயல்களில்...