×

ஆயுதம் விற்க ரஷ்யா செல்லும் கிம் ஜோங்

சியோல்: ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக அதிபர் புடினை சந்திக்க வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இம்மாதம் ரஷ்யா செல்கிறார். ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் ஒன்றரை வருடத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனை சமாளிக்க வட கொரியாவிடம் ஆயுதங்கள் வாங்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுத விற்பனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இம்மாதம் ரஷ்யா செல்ல உள்ளார் என்றும் ரஷ்யாவின் கிழக்கு நகரமான விளாடிவாஸ்டாக்கில் இந்த சந்திப்பு நடைபெறும் என அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. கிம் ஜோங் உன் பெரும்பாலும் ரயில்களில் தான் பயணம் செய்வார். அதற்கென பிரத்யேக பாதுகாப்பு வசதிகள் கொண்ட ரயிலைதான் பயன்படுத்துவார்.

ஒரு சில சமயங்களில்தான் அவர் விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவர் இதற்கு முன் சீன அதிபர் ஜின்பிங், அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரை சந்திக்க கிம் ரயிலில் தான் சென்றார். அதே போல் உக்ரைன் போருக்கு பின் புடினும் விமான பயணத்தை தவிர்த்து ரயிலில்தான் அதிகமாக பயணம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆயுதம் விற்க ரஷ்யா செல்லும் கிம் ஜோங் appeared first on Dinakaran.

Tags : Kim Jong ,Russia ,Seoul ,North Korean ,President ,Kim Jong Un ,Putin ,Dinakaran ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...