×

விரல் ரேகை நிபுணர்களுக்கான போட்டி இந்திய அளவில் 2ம் இடம் பிடித்த தமிழக பெண் எஸ்ஐ: டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு

சென்னை: விரல் ரேகை நிபுணர்களுக்கான போட்டியில் இந்திய அளவில் 2ம் இடம் பிடித்த தமிழக பெண் எஸ்ஐயை டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: அகில இந்திய அளவிலான விரல் ரேகை நிபுணர்களுக்கான போட்டி தேர்வு -2023 கடந்த 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை டெல்லியில் நடந்தது. இந்த போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட ஒரு விரல் ரேகை பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் தேவிபிரியா கலந்து கொண்டு 250 மதிப்பெண்களுக்கு 235 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 2ம் இடத்தை பிடித்துள்ளார். இதை பாராட்டும் விதமாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், டிஜிபி சங்கர் ஜிவால், போட்டி தேர்வில் 2ம் இடம் பிடித்த தேவிபிரியாவை தனது அலுவலகத்துக்கு நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். தேவி பிரியாவின் தந்தை திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் தனிப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஜெய்சங்கர் என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post விரல் ரேகை நிபுணர்களுக்கான போட்டி இந்திய அளவில் 2ம் இடம் பிடித்த தமிழக பெண் எஸ்ஐ: டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,DGP ,Shankar Jiwal ,CHENNAI ,Shankar ,Tamilnadu ,
× RELATED கலெக்டர் தொடங்கி வைத்தார் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதால்