×

அரசுக்கு அன்புமணி கோரிக்கை போதையில்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்

சென்னை: ‘‘தமிழ்நாட்டை போதையில்லாத மாநிலமாக அரசு மாற்ற வேண்டும்’’ என்று பாமக தலைவர் அன்புமணி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு:
மாணவர்களின் வாழ்வில் 12-ஆம் வகுப்பு மிகவும் முக்கியமானது. அந்த வகுப்பில் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிமுறைகளைத் தேடாமல், போதைப் பாக்குகளில் மாணவர்கள் வாழ்க்கையை தொலைக்கிறார்கள் என்றால், அவை மாணவர்களின் வாழ்வில் எத்தகையக் கேட்டை ஏற்படுத்துகின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம். சமூகம் சீரழிவதற்கு சட்டப்படி விற்கப்படும் மது உள்ளிட்ட போதைப் பொருட்களும், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மாவா, குட்கா உள்ளிட்ட போதைப் பாக்குகளும் தான் காரணம் ஆகும். இவற்றை ஒழிக்காமல் மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது.

தமிழக அரசு நினைத்தால் ஒரே ஆணையில் அனைத்து மதுக்கடைகளையும் மூட முடியும். சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் அனைத்து போதைப் பொருட்களையும் ஒரே நாளில் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை அரசும், காவல்துறையும் முழு வீச்சில் மேற்கொள்ளாதது ஏன்? என்பது தான் தெரியவில்லை. இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்தையும் காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருப்பதால், அனைத்து வகையான போதைப் பொருட்களையும் முற்றிலுமாக ஒழித்து தமிழ்நாட்டை போதையில்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

The post அரசுக்கு அன்புமணி கோரிக்கை போதையில்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Tamil Nadu ,CHENNAI ,Tamilnadu ,Bamako Anbumani ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...