×

முகமது அலி ஜின்னாவை ஆதரித்து பேச்சு அகிலேஷ்-யோகி மோதல்: போதை பரிசோதனை நடத்த கோரிக்கை

லக்னோ: உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதை சந்திக்க தயாராகி வரும் கட்சிகள், ஒன்றுக்கொன்று இப்போதே கடுமையாக மோத தொடங்கியுள்ளன. கடந்த வாரம் சமாஜ்வாடி கட்சித் தலைவரும், இம்மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ‘முகமது அலி ஜின்னா, நேரு, சர்தார் வல்லபாய் படேல், மகாத்மா காந்தி ஆகியோர் இந்தியா சுதந்திரம் பெற உதவியர்கள். இவர்கள் எந்த காரணத்துக்காகவும் போராட்டத்தில் இருந்து பின்வாங்காதவர்கள். அவர்கள் அனைவரும் ஒரே பல்கலை கழகத்தில் பாரிஸ்டர் பட்டம் படித்தவர்கள்,’ என்று பேசினார். இதற்கு பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தனது கூட்டணி கட்சியான ஜன்வாடி சோசலிஸ்ட் கட்சியின் அலுவலக திறப்பு விழாவில் அகிலேஷ் நேற்று பங்கேற்றார். அப்போது, ஜின்னா விவகாரம் குறித்து நிரூபர்கள் கேட்டதற்கு, ‘நான் ஏன் எந்த சூழலில் அவர்கள் ஒன்றாக படித்தார்கள் என்று சொல்ல வேண்டும். கேட்பவர்கள் வேண்டுமானால் வரலாற்று புத்தகத்தை மீண்டும் படிக்கட்டும்,’ என்று பதிலளித்தார். இதற்கு பதிலடியாக உபி பாஜ தலைவர் சுவதந்திரா தேவ் சிங் டிவிட்டரில் ‘ஜின்னா மீதான அன்பு இன்னும் அப்படியே உள்ளதா அகிலேஷ் ஜி… எந்த வரலாற்று புத்தகத்தை படிக்க வேண்டும் என்று தயவு செய்து சொல்லுங்கள். இந்தியன் அல்லது பாகிஸ்தானி…? ஜின்னாவை இன்னும் இந்தியா வில்லனாகத்தான் பார்க்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல், ‘படேலுடன் ஜின்னாவை ஒப்பிட்டு பேசுவது வெட்கக் கேடானது. ஜின்னாவை ஆதரிக்கும் கட்சிகளிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்,’ என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உபி அமைச்சர் ஆனந்த் சொரூப் சுக்லா, ‘அகிலேஷூக்கு போதை சோதனை நடத்தப்பட வேண்டும்,’ என்று கூறியுள்ளார்….

The post முகமது அலி ஜின்னாவை ஆதரித்து பேச்சு அகிலேஷ்-யோகி மோதல்: போதை பரிசோதனை நடத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mohammad Ali Jinnah ,Akhilesh ,Yogi ,Lucknow ,Uttar Pradesh ,
× RELATED அகிலேஷ் வேட்பு மனு தாக்கல்