×

மீஞ்சூர் சிற்பக்கூடத்தில் தயாராகும் கலைஞர், அண்ணா வி.பி.சிங் சிலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: சென்னை அடுத்த புதுப்பேடு பகுதியில் உள்ள சிற்பி தீனதயாளனின் சிற்ப கலைக்கூடத்தில் தற்போது, முன்னாள் பிரதமர் வி.பி.சிங், முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா ஆகியோரின் உருவச் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், களிமண்ணால் செய்யப்பட்டுள்ள தலைவர்களின் சிலை மாதிரிகளை பார்வையிட்டு, அந்த சிலைகளில் செய்யவேண்டிய திருத்தங்களை மேற்கொள்ளும்படி சிற்பி தீனதயாளனிடம் அறிவுறுத்தினார். இதையடுத்து, பிளாஸ்டர் ஆப் பாரீஸில் சிலைகள் வடிவமைத்து திருத்தங்கள் செய்து, அந்த 3 தலைவர்களின் வெண்கல சிலைகள் உருவாக்கப்படுகிறது. இதில், சென்னை மாநில கல்லூரியில் 9 அடி உயரத்தில் வி.பி.சிங்கின் முழு உருவ வெண்கலச் சிலையும், 3.5 அடி உயரத்தில் கலைஞர், அண்ணா சிலைகளும் விரைவில் அமையவிருக்கிறது. இந்த ஆய்வில் அமைச்சர் எ.வ.வேலு, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன், ஒன்றிய செயலாளர்கள் வல்லூர் ரமேஷ்ராஜ், காணியம்பாக்கம் ஜெகதீசன், நகர செயலாளர் தமிழ் உதயன், துணை தலைவர் அலெக்சாண்டர், நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவி கலாவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post மீஞ்சூர் சிற்பக்கூடத்தில் தயாராகும் கலைஞர், அண்ணா வி.பி.சிங் சிலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Anna VP Singh ,Meenjoor Sculpture Gallery ,Chief Minister ,M K Stalin ,Chennai ,Dinadayalan ,Puduppedu ,V.P. Singh ,
× RELATED தொகுதி மக்களிடம் நல்ல பெயர்...