×

வேதாரண்யம் அருகே திடீரென உள்வாங்கிய கடல்: மீனவர்கள் 3வது நாளாக முடக்கம்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே இன்று திடீரென கடல் உள் வாங்கியதால், பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி கடலில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. மேலும் கடல் அலையின் சீற்றமும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை, வானவன்மகாதேவி, திருத்தலைக்காடு, அண்ணாப்பேட்டை, சிந்தாமணிக்காடு, பெரிய குத்தகை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பைபர் படகு மீனவர்கள் 5,000 பேர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இந்தநிலையில் இன்றும் கடலில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் 3வது நாளாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துள்ளன. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், கடற்கரைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 3 நாட்களாக பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், ரூ.10 லட்சம் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.  இந்நிலையில் ஆறுகாட்டுத்துறையில் இன்று அதிகாலை 100 மீட்டருக்கு கடல் திடீரென உள்வாங்கி காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது.

The post வேதாரண்யம் அருகே திடீரென உள்வாங்கிய கடல்: மீனவர்கள் 3வது நாளாக முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Vedaranthayam ,Vedaranya ,Nagai District Vetaranayam Area ,Vadaranam ,
× RELATED வேதாரண்யத்தில் நாளை உப்பு...