×

3 பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவை அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு

சென்னை: 3 பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவை அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். துணைவேந்தர் தேர்வுக் குழுவில் யுஜிசி உறுப்பினர் கட்டாயமில்லை என தமிழ்நாடு அரசு நேற்று கடிதம் எழுதியிருந்தது. தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் யுஜிசி சார்பில் உறுப்பினர்களை நியமித்துள்ளார். ஆளுநர் ரவியுஜிசி சார்பில் உறுப்பினர் நியமனம் தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. யுஜிசி வழிகாட்டுதல்களை மட்டும் பின்பற்றினால் போதும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் துணைவேந்தர் தேர்வுக்குழுவில் வழக்கத்துக்கு மாறாக 4 பேரை ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்துள்ளார். கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக யுஜிசி பிரதிநிதியான சுஷ்மா யாதவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆளுநரின் சொந்த மாநிலமான பீகாரை சேர்ந்த பேராசிரியர் ரத்தோர் 2 பல்கலை. துணைவேந்தர் தேர்வுக்குழுவில் உள்ளார். சென்னை பல்கலை. துணைவேந்தர் தேர்வுக்குழுவில் பீகாரை சேர்ந்த ரத்தோர் இடம்பெற்றுள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் தேர்வுக் குழுவிலும் ரத்தோர் இடம்பெற்றுள்ளார். சென்னை பல்கலை., கோவை பாரதியார் பல்கலை.க்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை.க்கும் துணைவேந்தரை தேர்வு செய்யவும் குழு அமைத்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். சென்னை பல்கலை. துணைவேந்தர் தேர்வுக் குழுவில் கர்நாடக மத்திய பல்கலை. துணைவேந்தர் பட்டு சத்யநாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில திட்டக் குழு உறுப்பினர் கே.தீனபந்து, பாரதிதாசன் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் பி.ஜெகதீசன் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். யு.ஜி.சி. தலைவரின் பிரதிநிதியாக பீகார் மத்திய பல்கலை. முன்னாள் துணைவேந்தர் எச்.சி.எஸ்.ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பல்கலை. துணைவேந்தர் தேர்வுக் குழுவில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிக்கு ஆகுநர் இடமளிக்கவில்லை.

The post 3 பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவை அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Search and Examination Committee ,Universities ,Governor ,R.R. N.N. Ravi ,Chennai ,R. N.N. Ravi ,Vice ,Chance ,for Universities and ,Dinakaran ,
× RELATED அர்ஜெண்டினாவில்...