×

3 பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தரை தேர்வு செய்ய குழுவை அமைத்து ஆளுநர் உத்தரவு..!!

சென்னை: 3 பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவை அமைத்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். சென்னை பல்கலை., கோவை பாரதியார் பல்கலை., தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை.க்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர் கட்டாயம் இல்லை என தமிழ்நாடு அரசு நேற்று கடிதம் எழுதியிருந்தது. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் யுஜிசி சார்பில் உறுப்பினர்களை ஆளுநர் ரவி நியமித்துள்ளார்.

The post 3 பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தரை தேர்வு செய்ய குழுவை அமைத்து ஆளுநர் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் பலத்த மழை பெய்து வருவதால்...