
டெல்லி: ஜி-20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஜி20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதி நடைபெறவுள்ளது. நேற்று முதலே வெளிநாட்டு பிரதிநிதிகள் வர தொடங்கிவிட்டார்கள். அதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு தரப்பில் ஏற்கனவே ஒன்றிய அரசு சார்ந்த அலுவலகங்களுக்கு, செப்டம்பர் 9, 10ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டெல்லி மாநில அரசு தற்போது முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதாவது, டெல்லி முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செப்டம்பர் 8 முதல் 10ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர அடுத்தகட்டமாக 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை மற்ற மாநிலங்களில் இருந்து அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படும் மற்ற வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. வாகன தணிக்கைகளும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ராணுவம், துணை ராணுவம் என சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post ஜி-20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு..!! appeared first on Dinakaran.