×

அயோத்தி சாமியார் தலையை சீவினால் ரூ.100 கோடி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

சென்னை: அயோத்தி சாமியாரின் தலையை சீவினால் நான் ரூ.100 கோடி தருகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து, இந்துக்களுக்கு எதிராக பேசியதாக பாஜவினர் அவதூறு பரப்பி வருகின்றனர். இதற்கிடையே, சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியா என்ற சாமியார் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாயோன் திருவிழா மற்றும் மூக்கையா தேவரின் 44ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி நடைபெற்ற மலர் வணக்க நிகழ்வில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்; அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசினால் அமித் ஷா ஏன் கோபப்படுகிறார்?. உ.பி. சாமியார் தலையை சீவினால் நான் 100 கோடி தருகிறேன். சாந்தமே உருவானவர் போல் இருப்பவர்தான் சாமியார்; ஆனால் தலையை வெட்டுவேன், நாக்கை வெட்டுவேன் என்று கசாப்புக்கடைகாரர் போல் பேசுகிறார் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்; இந்தியாவின் பெயரை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளட்டும், ஆனால் தங்களுடைய நாடு தமிழ்நாடு. பாரத் என்று பெயர் வைத்து விட்டால் எல்லாம் மாறிவிடுமா? ஒரே நாடு ஒரே தேர்தல் போல் ஏன் ஒரே நீர் இல்லை. ஒரே நாடு என்று பேசுபவர்களால் ஏன் காவிரி நீரை பெற்று தர முடியவில்லை. இன்று பயிர் காய்கிறது, நாளை வயிறு காயும் என்று கூறினார்.

The post அயோத்தி சாமியார் தலையை சீவினால் ரூ.100 கோடி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Ayodhi Samiyar ,Seevin ,Tamil ,Coordinator ,Seeman ,Chennai ,Ayoti Samyar ,Sanadana ,Tamil Party ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 27...