×

7 வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த பாஜக எம்பி போன்றவர்கள் சமுதாயத்தின் நோய்: மல்யுத்த வீரர் கடும் விமர்சனம்

பஹ்ரைச்: ஏழு வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த புகாரில் சிக்கிய பாஜக எம்பி போன்றவர்கள் இந்த சமுதாயத்தின் நோய் என்று மல்யுத்த வீரர் குற்றம்சாட்டி உள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் நடந்த நிகழ்ச்சியில், பாலியல் புகாரில் சிக்கிய கைசர்கஞ்ச் தொகுதி பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் ேபசுகையில், ‘எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவளிப்பது நாட்டுக்கு செய்யும் துரோகம். இந்தக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக யாரை தேர்வு செய்கிறார்களோ, அதே நாளில் அந்த கூட்டணி முறியும். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 50 வயதுக்கு மேலாகியும் தகுதியான தலைவராக வளரவில்லை. நாடாளுமன்றத்தில் கண் சிமிட்டுவது போன்ற கேளிக்கைகளை செய்கிறார்’ என கூறியிருந்தார்.

இந்நிலையில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வெளியிட்ட பதிவில், ‘பிரிஜ் பூஷன் சிங் பேசியதை பலமுறை கேளுங்கள். இவரால் 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் அளித்துள்ளனர். அவரது பேச்சை டிவியில் பாருங்கள். பெண்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அவரது பார்வை உள்ளது. இவர்கள் சமுதாயத்தின் நோய்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த கருத்துக்கு சிலர் ஆதரவாகவும், சிலர் மாற்றுக் கருத்தும் தெரிவித்துள்ளனர்.

The post 7 வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த பாஜக எம்பி போன்றவர்கள் சமுதாயத்தின் நோய்: மல்யுத்த வீரர் கடும் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Bajaka MP ,Bahrich ,Bajaka ,Bhajaka MP ,
× RELATED 31 தொகுதிகளை கூட்டணிக்கு வழங்க திட்டம்;...