×

போதை மாத்திரை பயன்படுத்திய 5 பேர், அந்தியூரில் அதிரடி கைது

அந்தியூர்: அந்தியூர் அருகே போதை மாத்திரை பயன்படுத்திய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் ரோஜா நகர் முள்காட்டு பகுதியில் ஒரு கும்பல் போதை மாத்திரைகளை பயன்படுத்தி வருவதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது, 5 பேர் ஆன்லைன் மூலம் வாங்கிய போதை (டுபேண்டால்) மாத்திரைகளை நீரில் கரைத்து ஊசி போட்டு கொண்டிருந்தனர்.

இதையடுத்து போதை பொருட்கள் பயன்படுத்தியதாக அந்தியூர் அத்தாணி ஜெ.ஜெ. நகரை சேர்ந்த சிவ பாலாஜி (20), அத்தாணி அண்ணமார் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி (24), சத்தியமங்கலம் கெஞ்சனூரை சேர்ந்த சுசிந்தர் (22), தவிட்டுப்பாளையம் காளிதாஸ் காலனியை சேர்ந்த கோபிநாத் (19), தாசளியூர் தென்றல் நகரை சேர்ந்த கதிர்வேல் (24) ஆகிய 5 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 அட்டை போதை மாத்திரைகள் மற்றும் சிரஞ்சுகள், 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post போதை மாத்திரை பயன்படுத்திய 5 பேர், அந்தியூரில் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Andyur ,Andhiyur ,Anthiyur ,Thautupalayam ,
× RELATED நீலகிரி, அந்தியூர்,...