×

நாடு பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கும் வேளையில், பெயர் மாற்றம் என்ற அற்பச் செயலில் பாஜக அரசு ஈடுபடுகிறது: கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே

பெங்களூரு: நாடு பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கும் வேளையில், பெயர் மாற்றம் என்ற அற்பச் செயலில் பாஜக அரசு ஈடுபடுகிறது என்று கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே விமர்சனம் செய்துள்ளார். எதிர்கட்சிகள் கூட்டணிக்கு I.N.D.I.A என்று பொருள்படும் படி பெயர் வைத்ததில் இருந்து பாரத் என்ற பெயரை பா.ஜ.க.,வினர் முன் வைக்க துவங்கினர். தற்போது ஜி20 மாநாட்டின் அதிகாரப்பூர்வ அழைப்பிதழில் பாரத ஜனாதிபதி, பாரத பிரதமர் என குறிப்பிட்டதைத் தொடர்ந்து அப்பெயருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் குவிய துவங்கயிருக்கின்றன.

இந்நிலையில், இந்தியா என்று சொல்வதற்குப் பதில் பாரத் என்ற சொல்லை பயன்படுத்தும் பாஜக அரசு பற்றி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும், கர்நாடக அமைச்சருமான பிரியங் கார்கே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றப் போவதாக கூறி ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, பெயர்களைத்தான் மாற்றி கொண்டிருக்கிறது.

நாட்டின் பெயர் இந்தியில் பாரத்; ஆங்கிலத்தில் இந்தியா; அவ்வளவுதான். பெயர்களை மாற்றுவதால், வேறு எதுவும் மாறப்போவதில்லை. பாரத் எனப் பெயர் மாற்றுவதால் இந்தியா செல்வச் செழிப்புமிக்க நாடாகி விடுமா? இந்தியப் பொருளாதாரமே மாறிவிடுமா? என கேள்வி எழுப்பினார். நாடு பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கும் வேளையில், பெயர் மாற்றம் என்ற அற்பச் செயலில் பாஜக அரசு ஈடுபடுகிறது என்றும் பிரியங் கார்கே விமர்சித்துள்ளார்.

The post நாடு பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கும் வேளையில், பெயர் மாற்றம் என்ற அற்பச் செயலில் பாஜக அரசு ஈடுபடுகிறது: கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே appeared first on Dinakaran.

Tags : BJP ,Karnataka ,Minister ,Priyank Kharge ,Bengaluru ,BJP government ,
× RELATED பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு...