×

திருமணவிழாவில் மாப்பிள்ளை அழைப்பின்போது பெண்கள் புல்லட் ஓட்டியபடி முன்னால் செல்ல காரில் வலம் வந்த மணமக்கள்

*ஆந்திராவில் வீடியோ வைரல்

திருமலை : ஆந்திராவில் திருமணவிழாவில் மாப்பிள்ளை அழைப்பின்போது பெண்கள் புல்லட் ஓட்டியபடி முன்னால் செல்ல மணமக்கள் காரில் வலம் வந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம், ரஜோலு மண்டலம் ரஜோலு வர்த்தக சங்கத் தலைவர் காசு னிவாஸ் மகன் சுகேஷ் மற்றும் ரங்கநாயகியின் திருமண விழா நேற்று முன்தினம் வித்தியாசமாக நடைபெற்றது.

மாப்பிள்ளை அழைப்பில் மணமகனும், மணமகளும் ரதம் போன்று அலங்கரிக்கப்பட்ட காரில் அமர்ந்து வலம் வர முன்னால் ​​மகாராஷ்டிரா ஸ்டைலில் பெண்கள் புடவை அணிந்து புல்லட் பைக்கில் அணிவகுத்து ஓட்டி செல்ல மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர். அவர்களுக்கு பின்னால் உறவினர்களின் கார்கள் அணிவகுத்து சென்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

The post திருமணவிழாவில் மாப்பிள்ளை அழைப்பின்போது பெண்கள் புல்லட் ஓட்டியபடி முன்னால் செல்ல காரில் வலம் வந்த மணமக்கள் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,
× RELATED மிக்ஜாம் புயல் 3 மணி நேரத்தில் கரையை கடக்கிறது