×

அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியாரை கைது செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்

சென்னை: அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியாரை கைது செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.கார்த்திசிதம்பரம் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் அமைச்சரை ஒரு சாமியார் மிரட்டுவதை நாடும், காவல்துறையும் வேடிக்கை பார்க்கிறது என அவர் கூறியுள்ளார்.

அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பிரம்ஹன்ஸ் ஆச்சாரியா என்பவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை கத்தியால் குத்தியும், தீயிட்டு எரித்தும் மிரட்டியுள்ளதோடு, அமைச்சரின் தலையை சீவிக்கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்கு பரவலான கண்டனம் எழுந்துள்ள போதும், தேவைப்பட்டால் பரிசுத் தொகையை அதிகரிக்க தயார் என்று அவர் மேலும் மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலுக்கு பதிலளிக்கும் விதமாக தூத்துக்குடியில் நடந்த திமுக விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி, “எனது தலையை சீவ ரூ.10 கோடி எதற்கு 10 ரூபாய் சீப்பு போதுமே” என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியாரை கைது செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.கார்த்திசிதம்பரம் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் அமைச்சரை ஒரு சாமியார் மிரட்டுவதை நாடும், காவல்துறையும் வேடிக்கை பார்க்கிறது என அவர் கூறியுள்ளார். மேலும் இந்தியாவை பாரதம் என மாற்றினால் பல்வேறு அசவுகரியம் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

The post அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியாரை கைது செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Minister ,Udayanidhi ,Karti Chidambaram ,Chennai ,Udhayanidhi ,Congress ,Karthi Chidambaram ,
× RELATED தனது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர்...