×

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சென்னையில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு

சென்னை: கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சென்னையில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆவணி மாதம் தேய்பிறை எட்டாம் நாளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன. சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் அமைந்துள்ள பகவான் ஶ்ரீ கோகுல கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, அக்கரையில் உள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ‘இஸ்கான்’ கிருஷ்ணர் கோவிலில், கிருஷ்ணர் சிலைக்கு உத்தரபிரதேசம், ஹைதராபாத் போன்ற மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட முத்து, பவளம் மற்றும் விலையுயர்ந்த கற்கள் பதித்த ஆடை அணிவிக்கப்பட்டு, மங்கள, தூப், ராஜ் பக், துளசி, சந்திய போன்ற பலவகையான ஆரத்திகள் ஏற்றப்பட்டன. பின்னர் கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கிருஷ்ணர் ஜெயந்தி என்பதால் சென்னையில் உள்ள பிரச்சித்தி பெற்ற கோயில்களில் காலையில் இருந்தே பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

 

The post கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சென்னையில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Krishna Jayanti festival ,Krishna ,Chennai ,Krishna Jayanti ,Krishna temples ,
× RELATED செவியை நிறைத்து இதயத்தில் அமரும் நாமம்!