×

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு உளவுத்துறை காரணமா: இலங்கை அரசு விசாரிக்க முடிவு

இலங்கை: பிரிட்டனைச் சேர்ந்த சேனல் – 4 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த நபர் ஒருவர், ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு இலங்கை உளவுத்துறையே காரணம் என தகவல் தெரிவித்துள்ளார். இலங்கையில் 2019ல் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயத்தில் வெடிகுண்டு வெடிதத்தில் அந்நாட்டு உளவுத்துறைக்கு தொடர்பு என பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகிய ஆசாத் மவுலானா என்பவர் தான் சேனல் – 4 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

2019 ஏப்ரல் 21ல் தேவாலயத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 269 பேர் கொல்லப்பட்டனர். தேவாலயத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் ஏற்கனவே கூறப்பட்டது. உளவுத்துறைக்கு ஐ.எஸ். அமைப்பினருக்கும் இடையே சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாக தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தவர் தகவல் தெரிவித்துள்ளார். பிற்காலத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவான ஆயுதக் குழுவில் இணைந்தவர் ஆசாத் மவுலானா, சேனல் – 4 தொலைக்காட்சியின் பரபரப்பு செய்தியை அடுத்து ஈஸ்டர் குண்டு வெடிப்பு குறித்து மீண்டும் விசாரிக்கபப்டும் என இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுளள்து.

2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள், தலைநகர் கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஈஸ்டர் பண்டிகைக்காக தேவாலயங்களில் பெரிய குழுக்கள் ஒன்றுகூடியதால், எட்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. வர்த்தக தலைநகரான கொழும்பில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், செயின்ட் செபாஸ்டியன் தேவாலயம் மற்றும் சியோன் தேவாலயம் மற்றும் மூன்று சொகுசு ஹோட்டல்கள் ஆகிய மூன்று தேவாலயங்கள் தொடர்ச்சியான ஒருங்கிணைந்த இஸ்லாமிய பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் இலக்காகியுள்ளன. இந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.பிரிட்டனைச் சேர்ந்த சேனல் – 4 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த நபர் ஒருவர், ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு இலங்கை உளவுத்துறையே காரணம் என தகவல் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியின் பரபரப்பு செய்தியை அடுத்து ஈஸ்டர் குண்டு வெடிப்பு குறித்து மீண்டும் விசாரிக்கபப்டும் என இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு உளவுத்துறை காரணமா: இலங்கை அரசு விசாரிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Easter ,Sri Lankan Government ,Sri Lanka ,Channel 4 Television ,Britain ,Sri ,Lanka ,Government ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...