×

இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்ற ஆகக்கூடிய செலவு ரூ.14,000 கோடி: சு.வெங்கடேசன் எம்.பி. ட்வீட்

சென்னை: இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்ற ஆகக்கூடிய செலவு ரூ.14,000 கோடி என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்படுவதாக பல நாட்களாக பேச்சு அடிப்பட்டு வந்தது. ஆனால் மக்கள் இதை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து போன நிலையில் இந்தியாவின் பெயரை பாரத் என ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ ஜி20 கூட்டத்தின் சிறப்பு விருந்து அழைப்பிதழ்கள் இடம்பெற்று இருந்தது மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை உருவாக்கியது.

செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியா என்ற பெயரை பாரத் என பெயர் மாற்றும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி காட்டுத்தீ போல பரவிய நிலையில் பலர் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்ற ஆகக்கூடிய செலவு ரூ.14,000 கோடி என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்ற ஆகக்கூடிய செலவு ரூ.14,000 கோடி. தமிழ்நாட்டில் 1 – 5 வகுப்பு வரையுள்ள 17 லட்சம் மாணவர்களுக்கு 30 ஆண்டுகள் காலை உணவு வழங்கும் செலவுக்கு சமம். அரசியல் சாசனத்தின் முதல் வாரியான “இந்தியாவின் மக்களாகிய நாங்கள் ” மீதே பாஜக தாக்குதல் நடத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

The post இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்ற ஆகக்கூடிய செலவு ரூ.14,000 கோடி: சு.வெங்கடேசன் எம்.பி. ட்வீட் appeared first on Dinakaran.

Tags : India ,Bharat ,Venkatesan M. GP ,Chennai ,Venkatesan ,M. GP ,Dinakaran ,
× RELATED புதிய பாரத எழுத்தறிவு திட்ட செயல்பாடுகள் ஆய்வு