×

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த லாரி மீது வேன் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சின்னா கவுடன்டணூர் நான்கு முனை சந்திப்பு ரோட்டில் இந்த விபத்து இன்று அதிகாலை நிகழ்ந்திருக்கிறது. பெருந்துறை பகுதியை சேர்ந்த செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிசாமி, பாப்பாத்தி மற்றும் ஒரு வயது குழந்தை சஞ்சனா ஆகிய 6 பேரும் வேனில் கொண்டலாம்பட்டியிலிருந்து பெருந்துறைக்கு சென்றுக்கொண்டிருந்துள்ளனர். அப்போது நான்கு முனை சந்திப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் இந்த வேன் வேகமாக மோதியிருக்கிறது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து அறிந்த சங்ககிரி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் வேனில் இருந்தவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதால் அவர்களது சடலத்தை மட்டுமே மீட்க முடிந்துள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்கள் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழனிசாமியின் மகளுக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் அதனை தீர்த்து வைப்பதற்காக வந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே சிலையோரம் நிறுத்தி வைக்கப்படும் லாரிகளால் அடிக்கடி இது போன்று விபத்துகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் நேற்று இரவு உறவினர்களுடன் சேலத்தில் உள்ள மகள் வீட்டிற்கு வேனில் சென்றுவிட்டு மீண்டும் பெருந்துறைக்கு மகள், பேத்தியுடன் ஈரோட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

இந்த கோர விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறைய சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்கள் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பெருந்துறை திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன. தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியை எச்சரிக்கை விடுத்துள்ளர். நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆய்வு நடத்திய பின், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த லாரி மீது வேன் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Salem District ,Sangakiri ,Salem ,Dinakaran ,
× RELATED செல்பி எடுத்த மாணவனை தாக்கிய யானை