
சிவகங்கை, செப். 6: சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் மாநில மற்றும் மாவட்டத்தலைவர்கள் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்தநிலையில், மாநில தலைமையில் மாற்றம் என்ற பேச்சு முடிவுக்கு வந்தது. இந்நிலையில் திடீரென சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த சத்தியமூர்த்தி அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
புதிய மாவட்டத்தலைவராக சஞ்சய்காந்தியை நியமனம் செய்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். மானாமதுரையை சேர்ந்த சஞ்சய்காந்தி கடந்த 21ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். தற்போது கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர், மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக உள்ளார்.
The post காங்கிரஸ் மாவட்ட தலைவர் மாற்றம் appeared first on Dinakaran.