×

பருத்தி ஏலத்திற்கு வந்த பெண்ணை பாம்பு கடித்தது

நாமக்கல், செப்.6: நாமக்கல் கூட்டுறவு சங்கத்திற்கு ஏலத்தில் கலந்துகொள்ள வந்த பெண்ணை பாம்பு கடித்தது. நாமக்கல் -வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. சேந்தமங்கலத்தை அடுத்த அக்கியம்பட்டியை சேர்ந்த பெண் விவசாயி சாந்தி, பருத்தி மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தார். குடோனில் வைத்து பருத்தி ஏலம் நடைபெற்றது. பருத்தி மூட்டைகளை அங்கு அடுக்கி வைத்து விட்டு சாந்தி, களத்தில் ஒரமாக அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கிருந்த கட்டு விரியன் பாம்பு சாந்தியை கடித்து விட்டது. இதனால் சாந்தி வலியால் அலறி துடித்தபடி அங்கிருந்து ஓடினார்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் ஒன்று சேர்ந்து அந்த பாம்பை அடித்து கொன்றனர். சாந்தியை மீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கொல்லப்பட்ட பாம்பை பிளாஸ்டிக் பையில் போட்டு விவசாயிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

The post பருத்தி ஏலத்திற்கு வந்த பெண்ணை பாம்பு கடித்தது appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal Cooperative Society ,Namakkal-Agricultural Producers Cooperative ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்