
குமாரபாளையம், செப்.6: குமாரபாளையம் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரியில், மூன்று நாட்கள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாலிடெக்னிக் இறுதியாண்டு மாணவ,மாணவிகள் 160 பேர் கலந்து கொண்டனர். பயிற்சி முகாம் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரியுடன் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் இணைந்து நடத்தப்பட்டது. எக்ஸல் கல்விக் குழுமத்தின் நிறுவனர் நடேசன், துணைத் தலைவர் மதன்கார்த்திக் ஆகியோர் தலைமை வகித்தனர். எக்ஸல் கல்விக் குழுமத்தின் செயல் இயக்குனர் பொம்மணராஜா முன்னிலை வகித்தார். எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சுப்ரமணியன் வரவேற்றார்.
இப்பயிற்சி முகாமில் தன்னம்பிக்கை பேச்சாளர் வெற்றிவேல், நிறுவனர் நிவாஸ் நடராஜன், சக்தி அகாடமி முதன்மை பயிற்சியாளர் நேதாஜி, ஒபெக்ஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டாளர்கள் முரளி, வெங்கடேஷ், லிங்க பைரவி நிறுவன தலைவர்கள் ஆல்பர்ட்ராஜ், ராஜேந்திரன் மற்றும் மாவட்ட தொழில் மைய மேலாளர் சகுந்தலா கலந்து கொண்டு பேசினர். இம் முகாமில் எக்ஸல் கல்வி குழுமத்தின் தொழில் நுட்ப இயக்குனர் செங்கோட்டையன், வேலைவாய்ப்பு அலுவலர் யுவராஜ் மற்றும் கல்லூரி துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். இம்முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை முதன்மை ஒருங்கினைப்பாளர் ஓபுலட்சுமி, ஒருங்கினைப்பஔர் மோகன்குமார், கல்லூரி துணை ஒருங்கினைப்பாளர் பிரவீண், ரவிக்குமார், சுரேந்திரன், இளங்கோவன் மற்றும் தழிழ்ச்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.
The post திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.