×

சித்தளி கிராமத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

குன்னம்,செ.6: குன்னம் அடுத்துள்ள சித்தளி கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் மருதமுத்து மற்றும் ஒன் ஸ்டாப் சென்டர் உறுப்பினர் கீதா ஆகியோர் சித்தளி கிராமத்தில் உள்ள பொது மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், பெண்கள் உதவி மையம் 112, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும் முதியோர் உதவி எண்கள் 14567, சைபர் கிரைம் உதவி எண்கள் 1930 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சித்தளி கிராம பொதுமக்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் பெண்கல்வியை ஊக்குவிப்போம் பள்ளிகளில் இடைநின்ற பெண்குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேரப்போம். மேலும் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பெண் பிள்ளைகளுக்கு மன வலிமை உண்டாக்கும் வகையிலும் அவர்களின் பிரச்சனைகளை தைரியமாக எதிர்த்து போராடும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தொடுதல் குறித்த விழிப்புணர்வை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

The post சித்தளி கிராமத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Sidthali ,Gunnam ,Se.6 ,Perambalur District ,Dinakaran ,
× RELATED பெரிய வெண்மணி கிராமத்தில் கலைஞரின்...