×

ஜனவரி 21ம் தேதி கள் இறக்கும் போராட்டம்: தமிழ்நாடு கள் இயக்கம் தகவல்

சென்னை: கள் மீது உள்ள தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் வரும் ஜனவரி 21ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கும் போராட்டம் நடைபெறும் என இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது:
தமிழ்நாடு அரசு கள் விற்பனையில் கலப்படம் காரணம் காட்டி தடை செய்து விட்டது. ஆனால் அருகில் உள்ள புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலத்தில் கள் விற்கப்படுகிறது, அங்கு கலப்படம் தடுக்கப்படுகிறது எனவே தமிழக அரசு கலப்படத்தை தடுக்க நடவடிக்கை எடுத்து தடை நீக்கவேண்டும். வரும் தேர்தல் வரும் முன் தடையை நீக்க வேண்டும். கள் உடலுக்கு கெட்டது என்பதை விளக்கினால் நாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். கள் மீது உள்ள தடையை நீக்க வேண்டும் என வரும் ஜனவரி 21ம் தேதி கள் இறக்கும் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஜனவரி 21ம் தேதி கள் இறக்கும் போராட்டம்: தமிழ்நாடு கள் இயக்கம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamilnadu s ,Chennai ,Tamil Nadu s Movement ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...