×

போர் வாகன ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒன்றிய அமைச்சர் ஆய்வு

சென்னை: ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு (சி.வி.ஆர்.டி.இ) ஒன்றிய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர்  அஜய் பட் வந்து ஆய்வு நடத்தினார். ஆவடி போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு ஒன்றிய பாதுகாப்பு இணை அமைச்சர்  அஜய் பட் நேற்று முதன் முறையாக வந்திருந்தார். இதை தொடர்ந்து, புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் இயக்குநர் ஜெனரல் எஸ்.வி.கேட், சி.வி.ஆர்.டி.இ.யால் உருவாக்கப்பட்ட பல்வேறு சாதனைகள் மற்றும் முக்கியமான தொழில்நுட்பம், தயாரிப்புகள் மற்றும் தற்போது நடந்து கொண்டிருக்கும் திட்டங்கள் குறித்து விளக்கினார். அதன்பிறகு, இணை அமைச்சர் மெயின் போர் டேங்கில் குழு உறுப்பினர்களுடன் சவாரி செய்தார். இந்திய மேட் டேங்கின் மேம்பட்ட அம்சங்களை கேட்டறிந்தார்.

The post போர் வாகன ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒன்றிய அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Union ,Combat Vehicle Research Institute ,CHENNAI ,Union Ministry of Defense and Tourism ,Combat Vehicle Research and Development Institute ,CVRTE ,Avadi ,Dinakaran ,
× RELATED ஒன்றிய விசாரணை அமைப்புகளின்...