×

மத அரசியலை புறக்கணிக்க வேண்டும் தவறான கருத்தை இந்துத்துவா சக்திகள் உருவாக்குகிறார்கள்: துரை வைகோ பேட்டி

மதுரை: நாடாளுமன்ற தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்ற தவறான கருத்தை இந்துத்துவா சக்திகள் உருவாக்குகிறார்கள் என துரை வைகோ கூறினார். துரையில் வரும் 15ம் தேதி நடைபெறும் மதிமுக சார்பிலான அண்ணா பிறந்தநாள் விழா மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அளித்த பேட்டி: மனிதர்கள் அறத்தை, தர்மத்தை பின்பற்ற வேண்டும். இந்து என்பது வாழ்வியல் முறை.

ஆனால் இந்து மதத்தை கொண்டு அதன் பெயரால் ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களிடையே பிரிவினையை உருவாக்கி இழிவான சில் காரியங்களை விதைத்தார்கள். இதைத்தான் திராவிடம் எதிர்க்கிறது. இதன் அடிப்படையிலேயே தான், இதுபோன்ற கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். அவர், இந்துக்களுக்கு எதிரி அல்ல, இந்து மதத்திற்கு எதிரி அல்ல. இந்து மக்களை ஒழிக்க வேண்டும் என்று பேசியது போல் நாடு முழுவதும் தவறான கருத்தை இந்துத்துவா சக்திகள் உருவாக்குகிறார்கள். மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும். 2024 தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக இதுபோன்ற குறுக்கு வழியை கையாளுகிறார்கள். இதை விட இன்னும் மோசமாக செயல்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post மத அரசியலை புறக்கணிக்க வேண்டும் தவறான கருத்தை இந்துத்துவா சக்திகள் உருவாக்குகிறார்கள்: துரை வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Hindutva ,Durai Vaiko ,Madurai ,Hindus ,
× RELATED இந்திய கடற்பகுதியில் எல்லை தாண்டி...