×

சாலவாக்கம் ஆஞ்சநேயர் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு

உத்திரமேரூர்: சாலவாக்கம் கிராமத்தில் ஆதித்யபால ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த சிறப்பு வழிபாடு நடந்தது. உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் பிரசித்திபெற்ற ஆதித்ய பால ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில் முதலாம் ஆண்டு சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இதில், ஆதித்ய பால ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனைதொடர்ந்து, பால ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர், தீபாராதனை காண்பிக்கப்பட ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக, கோயில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, இந்து சமய அறநிலைத்துறை மாவட்ட குழு நிர்வாகி வெங்கடேசன், சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post சாலவாக்கம் ஆஞ்சநேயர் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Salavakkam Anjaneyar Temple ,Adityapala Sri Anjaneyar ,Temple ,Salavakkam ,
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...