
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையுடன் இணைந்து பணிபுரிய கடந்த சில மாதங்களுக்கு முன், ஊர் காவல்படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு பெற்ற 41 ஊர் காவல் படையினருக்கு பணி ஆணை வழங்கும் விழா செங்கல்பட்டு ஐடிஐ மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு ஊர் காவல்படை மண்டல தளபதி கணேஷ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் கலந்துக்கொண்டு 6 பெண்கள், 35 ஆண்கள் என மொத்தம் 41 பேருக்கு 45 நாட்கள் பயிற்சி முடிந்த நிலையில் அவர்களுக்கு பணி ஆணையை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், ‘‘45 நாட்கள் பயிற்சியை முடித்து பணி ஆணை பெற்ற 41 பேருக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும், காக்கி உடை அணிந்திருப்பதால் சமூகத்தில் பொறுப்பாக நடந்துக்கொள்ள வேண்டும். காவல் துறை செல்லும் அனைத்து இடங்களுக்கும் ஊர்காவல் படையினரை பாதுகாப்பு பணிக்கு அழைத்து செல்வார்கள். அனைவரும் நேர்மையாக பணியாற்றிட வேண்டும்,’’ என்றார்.
The post ஊர் காவல்படை பயிற்சி நிறைவு: எஸ்பி சாய்பிரனீத் பங்கேற்பு appeared first on Dinakaran.