×

நீர்வரத்து 6,500 கனஅடியாக சரிவு ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 6,500 கனஅடியாக சரிந்துள்ளதால் மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதாலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததாலும் ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2ம் தேதி காலை 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

நீர்வரத்து அதிகரிப்பால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் அன்று மாலை முதல் காவிரியில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து மழை சற்று தணிந்ததால் நேற்று முன்தினம் காலை நீர்வரத்து 8,000 கனஅடியாக சரிந்தது. நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து 6,500 கனஅடியாக சரிந்தது. நீர்வரத்து சரிந்துள்ளதால் காவிரியில் நேற்று காலை முதல் மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 8060 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 6428 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 8,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 48.23 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 47.99 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 16.56 டிஎம்சியாக உள்ளது.

The post நீர்வரத்து 6,500 கனஅடியாக சரிவு ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Okanagan River ,Bennagaram ,Parisal ,Okanagan Cauvery ,Karnataka ,Okanagan ,Paris ,Dinakaran ,
× RELATED சிறுமியை கர்ப்பமாக்கிய விவகாரம்;...