×

வடக்கு தாமரை குளத்தில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் முதியவர் உடல் மீட்பு

தென்தாமரைகுளம், செப். 6:ஈத்தங்காடு அருகே உள்ள வடக்கு தாமரை குளம் கீழத் தெருவை சேர்ந்தவர் பழனி (85). இவரது மனைவி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருவதால் பழனி மட்டும் தனிமையாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பூட்டியிருந்த அவரது வீட்டின் ஜன்னல் வழியாக துர்நாற்றம் வீசி உள்ளது. இத்தகவலை அருகில் உள்ள உறவினர், பழனியின் மகன் முருகசுந்தரத்திற்கு (51) தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஊருக்கு விரைந்து வந்த முருகசுந்தரம் வீடு பூட்டியிருந்ததால் வீட்டு பின்பக்கம் உள்ள கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கழிவறை அருகே பழனி இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தென்தாமரைக் குளம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் அழுகிய நிலையில் கிடந்த பழனியின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி முருகசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாணை நடத்தி வருகின்றனர்.

The post வடக்கு தாமரை குளத்தில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் முதியவர் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : North Lotus Pond ,Thenthamaraikulam ,Palani ,North Tamarai Kulam Keeza Street ,Eathangadu ,
× RELATED கார் டிரைவருக்கு பணத்தை...