×

திருத்தணி அரசு பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

திருத்தணி: திருத்தணியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா ஆசிரியர் தின விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு, திருத்தணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ராதாகிருஷ்ணன் திருவுருவ சிலைக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி எம்.பூபதி தலைமையில், திருத்தணி நகர திமுக செயலாளர் வினோத்குமார், நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, நகர்மன்றத் துணைத் தலைவர் சாமி ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது, நகர்மன்ற கவுன்சிலர்கள் ஜி.குமுதா கணேசன், ஜி.அப்துல்லா, பார்வதி, தீபா ரஞ்சனி வினோத்குமார், பிரசாத், செண்பகவல்லி ஆறுமுகம், மகேஸ்வரி கமலக்கண்ணன், விஜய், சத்யா ரமேஷ், லோகநாதன், பிரேமா சந்திரன், நசீமா முஸ்தபா, ரேவதி சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருத்தணி அரசு பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Teacher's Day ,Tiruthani Government School ,Thiruthani ,Dr. ,Radhakrishnan ,Tiruthani ,
× RELATED உழவு, களையெடுப்பு, அறுவடை உள்ளிட்ட...